Thursday, March 26, 2015

வாளும் குழலும்


ஜெ

திரௌபதியின் தூதாகச் செல்லும் கிருஷ்ணனின் சித்திரத்தில் அங்கே உள்ள பெண்களெல்லாம் அவர் மேன் கொள்ளும் காதலும் வந்து ஒட்டிக்கொள்கிறது. அந்தப்பெண்களின் பரவசத்தை நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அதைப்பற்றிய சாத்யகியின் விளக்கமும் நுட்பமானது. பெண்கள் பார்ப்பது ஒரு மனிதனை அல்ல. அவர்கள் ஒரு குறியீட்டைப் பார்க்கிறார்கள். அன்றைய காலகட்டம் வீரயுகம். அன்று வீரர்களே பேசப்பட்டார்கள். வீரர்கள் பெண்களை வெற்றிகொள்லக்கூடியவர்கள். சுயம்வரத்தில் போட்டியிட்டோ தூக்கிக்கொண்டு வந்தோ மணப்பவர்கள். காதலுக்கு அன்றெல்லாம் பெரிய இடம் இல்லை. ஆனால் கிருஷ்ணன் ரொமான்டிக் ஆனவன். காதலின் வடிவம். குழலிசைப்பவன். வாளுக்குப்பதிலாக இசையை வைத்திருப்பவன். அப்படிப்பட்ட காதலனுக்கான அவர்களின் ஏக்கமே கிருஷ்ணனாக வந்தது என்று சொல்லலாம் அதைத்தான் சாத்யகியும் சொல்கிறான்

அருண்