Thursday, March 12, 2015

வரும் மரணம்



அன்புள்ள ஜெமோ

வெண்முரசின் இந்தப்பகுதியை இனிமையாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே இதெல்லாமே பெரிய போரிலேதானே சென்று முடியப்போகிறது என்ற எண்ணமும் சேர்ந்தே வந்துகொண்டிருந்தது. இது பெரிய துன்பத்தை அளிக்கக்கூடியது. ஆனால் மகாபாரதத்தை இப்படி நினைக்காமல் வாசிக்கவே முடியாது. ஒவ்வொரு மனிதர்களும் சாகப்போகிறார்கல். அவர்களின் பெண்கள் அனாதைகளாக ஆகப்போகிறார்கல். பெரிய ரத்தமழை பெய்யப்போகிறது . யாருமே ஒன்றுமே செய்யமுடியாது என்பதுதான் உண்மையான நிலைமை இல்லையா

இந்த அழகிகளைப்பார்க்கையில் இவர்களெல்லாம் என்ன ஆவார்கள் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது. எல்லாருமே இனிமையான பெண்கள். ஆனால் போர் வந்துகொண்டிருக்கிறது. இந்தத்தவிப்பிலே இருந்து மீண்டு வரவே முடியவில்லை.

சிவக்குமார்