Friday, March 13, 2015

விதிகொள்ளும் வஞ்சம்



ஜெ

போரில் கர்ணன் தோற்கும் இடம் வாசித்தேன். மீண்டும் ஒரு தோல்வி. இங்கேயும் வன் விதியால்தான் தோற்கிறான். விதி என்று வந்து நிற்பது அவனுடன் இருக்கும் மனிதர்கள். துர்யோதனனின் அவசரப்புத்திதான் முதலில் தோல்விக்கான காரணம். அதன்பிறகு மற்றவர்கள் பின்வாங்கியது இன்னொரு காரணம். அது விதி எடுக்கும் முடிவு என்பது அந்தப்படை திரும்பி ஓடியதில் நுணுக்கமானச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது

ஒரு வியாபாரமோ நிறுவனமோ சரியும்போது நம்மால் அதை ஒன்றும் செய்யமுடியாது. துரியோதனும் தம்பிகளும் கதறுவது போல கைகளை விரித்து நின்று கதறத்தான் முடியும். ஆனால் அதுபாட்டுக்கு நடந்துவிடும்

போர்முனையில் இருந்து சடலம்போல செல்லும் கர்ணனை நினைக்கவே மனசு ஆறவில்லை. விதி அவனை வாட்டி வதைக்கிறது. அவனுக்குள் அத்தனை வஞ்சத்தை அது நிறைத்து குருஷேத்திரத்தை நோக்கிக் கொண்டுசெல்கிறது

சாரங்கன்

வண்ணக்கடல் பற்றி கேசவமணி


மழைப்பாடல் பற்றி கேசவமணி