Sunday, March 15, 2015

பால்ஹிகரின் ஓநாய்கள்



ஜெ

ஒரு வாசகர் எழுதியதை வாசித்ததும்தான் நானும் பால்ஹிகரைப்பற்றி தனியாக யோசிக்க ஆரம்பித்தேன். பலவிதமான ஆச்சரியங்கள் எனக்கு அந்தக்கதாபாத்திரத்தில் இருந்தன. முதலில் அவருக்கு என்னதான் ஆயிற்று? எப்படி அவர் மலைகளில் இருந்து அப்படியே மறைந்து காணாமலானார்? என்னவொோ ஒன்று நடந்திருக்கிறது. அதைபொ்்புரிந்துகொள்ள பெரிய க்ளூ என்பது அவர் ஓநாய்களைப்பற்றிச் சொல்வதுதான். ஓநாய்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ஆரம்பம் முதலே ஓநாய்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒநாய்களின் கடுமையான பசியைப்பற்றித்தான் பூரிசிரவஸின் கதை பல முறைச் சொல்லிக்கொண்டிருக்கிறது பிரேமைகூட ஓநாய்களுக்குச் சபபாடு ஊட்டுகிறாள்

அந்த ஓநாய்களுக்கும் பால்ஹ்்ிகருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது இல்லையா? அவர் சொல்வது ஓநாய்களைப்பற்றி என்றால் அதுக்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும்?

சித்ரா