Tuesday, March 17, 2015

முன்னரே கதையை அறிதல்



வணக்கம் ஜெ சார் .

இது எனது முதல் கடிதம் தங்களுக்கு .

பிரயாகை முதலாக வாசிக்க ஆரம்பித்து ,
வெண்முரசை பின்னிலிருந்து படித்து முடித்தேன் .

படித்து கொண்டிருக்கிறேன் .

பூரிசிவரஸ்  பாத்திரத்தை படித்த பின்பு  ஏற்பட்ட 
உந்துதலால் , பூரிசிவரஸ்  விக்கி -யை படித்தேன்.

சாத்யகி மேல்  வெறுப்புடன் இருந்தேன். என்னால் பூரிசிவரஸின் , மரணத்தை ஏற்க முடியவில்லை .


மறுநாளே , தாங்கள் சாத்யகி அத்தியாயத்தை தொடங்கிய  உடன்,
தாங்கள் வாசகர்களை, தயார்படுத்தும் முறை அறிந்து வியந்து கொண்டே இருக்கிறேன் .(அந்த கனவுகள்!!!) விக்கி -யை படித்து இருக்ககூடாதோ என வருந்துகிறேன்.

இப்படிக்கு,
சௌமியா 

அன்புள்ள சௌம்யா

மகாபாரதக்கதை அனேகமாக அனைவருக்கும் தெரிந்ததே. தெரியாவிட்டாலும் உடனே விக்கியில் வாசிக்க முடியும்

ஆனால் வெண்முரசு கதை அல்ல. கதையின் பின்னணியால்தான் இது நாவலாகிறது

ஆகவே பிரச்சினை இல்லை

ஆனால் ஓர் இழப்பு உள்ளது. நாம் இயல்பாக வாசிக்கமுடியாமலாகும்

ஜெ