Monday, March 23, 2015

தோழன்



அன்புள்ள ஜெ ,

வெண்முரசின் புதிய அத்தியாயங்களில் உள்ள சின்ன விஷயங்களை மனசிலே திரட்டிக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறேன். கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே உள்ள உறவு. இருவரும் வேறு என்ன என பேசிக்கொள்வார்கள்? பெண்களைப்பற்றித்தான் என்று ஒரு சேவகன் சொல்கிறான். கிருஷ்ணார்ஜுன உறவு என்பதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். அது நண்பனாக குரு வருவது. அந்தவகை உறவை எத்தனைச் சொன்னாலும்கூட அப்படி யோசிக்கமுடியவில்லை. வாட போடா என்று அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கும்போது ஒரு அதிர்ச்சி.ஆனால் அதுதான் முக்கியமான உறவு என்ற எண்ணமும் வந்தது. இந்த நுட்பத்தைப்புரிந்துகொண்டால் கீதையின் ரகசியமும் புரிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டேன். நன்றி


சண்முகம்