Monday, May 11, 2015

கிருஷ்ணனும் கடவுளும்

 
 
 
 
"அதன் எவ்விளைவுகளையும் எதிர்நோக்காது இயற்கையை ரசிக்கத் துவங்கி விடுகிறான். "

கண்ணன் வெறும் இயற்கையை பார்ப்பதாக எனக்கு தோன்றவில்லை.

காட்டின் ஒளி மாறுபட்டிருப்பதை சாத்யகி கண்டான். நீர் இன்னும் சற்று கருமைகொண்டிருந்தது. இலைநுனிகளில் எரிந்த வெண்சுடர்கள் செம்மையையும் கலந்துகொண்டிருந்தன. நினைத்திருக்காமல் வந்த எண்ணமென ஒரு காற்று இலைத்தழைப்புகளை குலுங்கச்செய்தபடி கடந்துசென்றது."

அது போலவே அதீத தரன் கொன்ட மானுடனா கடவுளா என்ற புதிர் இன்னும் உள்ளது என்றே படுகிறது.
அல்லது கடவுள் ஆகிவர வந்து கொன்டு இருக்கிறானோ.. என்னவோ

முன்பு அவன் ஒரு முறை நடக்கபோவது எல்லாம் தெரிந்து விட்டால் என்ன உள்ளது என்பது போலவும் ஒரு இடத்தில் சொல்கிறான்.

இந்த இடத்தின் சொல்லாடலை, ஒரு வேளை அவன் கர்ணனின் பிறப்பது அறிந்து(?) இருந்தமையால், தருமனிடம் - பான்டவர்களிடம் சொல்வதாக கொள்ளலாம் அல்லவா. அதாவது, அவன் கௌரவ பான்டவர்களுக்கு எல்லாம் மூத்தவன் என்றால்.. அதை ஒப்புகொன்டு கர்ணன் வெளிகொன்டு வர கண்ணனால் முடிந்து இருந்தால் - அல்லது அண்ணன் தம்பியர் கூடும் தருனத்தில் - மூதவனை எண்ணியதால், ஒரு நாள் அந்த இலக்கையும் அடயலாம் என்று கண்ணன் எண்ணி இருந்ததால் சொல்லி இருக்கலாம் அல்லவா.

இப்படி நான் நினைக்க காரனம், போருக்கு முன் தூது வரும் கண்ணன் ஹஸ்தினபுரியில் (நான் இதுவரை பார்த்த, உபன்யாசத்தில் கேட்ட, படித்த பாரத ஆக்கங்களில்) இருவரை மட்டுமே சந்திக்கிறான். ஒன்று விதுரர், மற்றொன்று கர்ணன். அந்த தருனத்திலும் போரை கண்ணன் கர்னனை கொன்டு நிருத்த முயன்று இருக்கலாம்.

ஒரு திரியில் கர்ணன் ஏன் சகோதரர் சந்திப்பில் இல்லை என்பதர்க்கு.. அவன் அங்கு இருந்திருந்தால் ஒரு வேளை தருமனால் எல்லாமே முடிந்து மகுடம் கர்ணனிடமே சென்றிருக்கலாம் என்றே எண்ண தோன்றுகிரது.


நன்றி
வெ. ராகவ்