Sunday, May 17, 2015

மாயா முகம்



ஜெ

வெண்முரசில் கதாபாத்திரங்கள் மனசில் நிற்பதில்லை என்ற குறை என்னைப்போலவே நிறைய வாசகர்களுக்கு இருக்குமென நினைக்கிறேன். அதுக்கான காரணம் ஒன்று நிறைய கதாபாத்திரங்கள். கதாபாத்திரங்களே ரெண்டு வகை. பெயர்களாக வருபவர்கள், தனிப்பட்ட குணாதிசயம் இல்லாதவர்கள் நிறயபேர். அவர்கள் அப்படித்தான். சரிதிரத்திலேயே கூட 90 சதமானம் மேல் மக்கள் ஒரு பிரயோசனமும் இல்லாமல் வாழ்ந்து செத்துப்போகிறவர்கள் அல்லவா?

இன்னொருவகை மக்கள் குட்டிக்குட்டி மனிதர்கள். மறக்கக்கூடாதவர்கள். ஆனால் மறக்காமலிருக்கமுடியாது. ஏனென்றால் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது. புதிசு புதிசாக வாழ்க்கை வந்து விழுந்துகொண்டே இருக்கிறது. எல்லாமே பறந்துபோய்விடுகிறது

இந்த வாழ்க்கையின் விசித்திரத்தைத்தான் நான் வெண்முரசிலே பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் எல்லா முகங்களுக்கும் நடுவே கிருஷ்ணனின் முகம் மாயாததாக அப்படியே இருந்துகொண்டிருக்கிறது

அரவிந்தன்