ஜெயமோகன் அவர்களுக்கு
போன வாரத்தில் ஒரு கல்வெட்டு பற்றிய நிகழ்வுக்கு சென்றேன். அங்கு பத்ரி சேஷாத்ரி அவர்களை சந்தித்தேன்.
ராய்
மக்ஸம் - சிறில் அலெக்ஸின் உப்பு வேலி - நிகழ்ச்சி நடந்த ஞாயிருக்கு
முந்தின தினம், சனி கிழமை அதே அரங்குக்கு சென்று விட்டேன் (ஏன் என் மனதில்
சனி கிழமை என்று பதிந்து வைத்தேன் என்று தெரியவில்லை). ஒருவர் தீவிரமாக
வங்கிகள் பற்றி எல்லாம் பேசி கொன்டு இருந்தார், தபித்து வெளியே வந்த போது
பத்ரியும் என்னை போல் ஒரு நாள் முன்னமே வந்து மேலேயும் கீழேயும் உப்பு
வேலியை தேடினோம். அவர் மையிலை ஒட்டிய பகுதிகளில் cycle-ல் சுற்றூவார்
போலும். நான் தனியாக சென்றால் சென்னைகுள் cycle-லில் தான். பாவம் குரைவாக
உடுத்தி இருந்தாலும் என்னை போலவே வெர்த்து கொட்டி இருந்தார்.
சரி, அன்று அவரிடம் பேசிய அறிமுகம் இருந்ததால், போன வார நிகழ்சியிலும் பேசினேன்.
"வென்முகில் நகரம் செம்பதிப்பு வருமா? உன்டு என்றால் ஒவியங்களுடனா?" என்று கேட்டேன்.
அவரும் என் உவப்புக்காக வந்துவிடும் என்பதாக சொன்னார் என்று நினைக்கிறேன்.
உங்களிடம்
தான் நாங்கள் எதை எதையோ கூரி கொன்டு இருக்கிறோமெ, எனக்கு தோன்றுகிறது
அதணால் கேட்கிறேன். தவறு என்றாலோ, அல்லது என் எப்போதும் பொல ஆர்வகொளாறோ -
மன்னியுங்கள்.
தவரை சுட்டிகாட்டவும்/ திட்டவும் உங்களுக்கு இல்லாத உரிமை இல்லை.
செம்பதிப்பு உன்டு என்றால் அதில் இப்பொது போய் ஒவியங்கள் வேண்டுமா? மாராக நீலம் வந்த போது தானே நீங்கள் விவாத தளம் ஆரம்பித்தீர்கள்.அவைகளில் உள்ள, வாசிப்புக்கு வலு சேர்க்க கூடிய நல்ல கடித்ங்கள், உங்களுடய பதில்களை புத்தகத்தின் கடைசியில் சேர்பது சரி ஆகுமா?உதாரனம் மகாபரதம் நடந்த காலத்தின் அரசியல் பற்றிய பதிவு.எடுத்துகாட்டாக கொடுக்க பட்ட வரை படம், இது போல.
இவை ஆக்கதிர்க்கு வலுவாக இல்லாமல் - கவனம் திசை திரும்ப தான் வழி வகுக்கும் என்றால் அதை புத்தகத்தில் சேர்பது சரி படாது.
ஆணால் இப்படி எண்ணியதால் கூர விரும்பினேன்.
இது முன்னாலேயே நீங்கள் பரிசீலித்து இருக்கலாம். நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்?
நன்றி
வெ. ராகவ்
அன்புள்ள ராகவ்
செம்பதிப்பு என்பதே ஓவியங்கள் அச்சில் வந்தாகவேண்டும் என்ற நோக்கத்தால் உருவாக்கப்பட்டது.
ஓவியங்கள் இல்லாவிட்டால் செம்பதிப்பு என்பதில் பொருள் இல்லை. வேண்டுமென்றால் கெட்டி அட்டைப்பதிப்பு ஒன்று கொண்டுவரலாம்
ஆனால் ஒரு நூலுடன் அதைப்பற்றிய விவாதங்கள் வரக்கூடாது. அது வாசிப்பை வழிநடத்துவதாக ஆகும்.
ஜெ