Wednesday, May 13, 2015

கிருஷ்ணனும் கடவுளும் எதிர்வினை


"இதை ஒன்றுமில்லை என்றாக்கும் சிலவற்றை நான் பின்னர் அளிப்பேன்அந்த ஒரு சொல் மற்றும் வரி பற்றிய கடிதம் படித்தேன். நமக்கு கிருஷ்ணனை பற்றி தெரிந்ததால் மட்டுமே அலமலந்து பயந்து போய் அந்த சொல்லை பிடித்து கொள்கிறோம் என்று ஏன் எடுத்து கொள்ளகூடாது? இந்த சந்தோசத்திற்கு மேல் இன்னும் பலதை அளிப்பேன் என்றும் எடுத்து கொள்ளலாமே? அல்லது சில துர் நிகழ்வுகள் வருவதற்கு முன்னரே சிலரின் வாயில் சொற்களை அமைத்து கொண்டு விழுந்து தொலைக்கும் - அவனுக்கே தெரியாமலும் கூட ... அவ்விதமாக கூட இருக்கலாம். 

ஏனெனில் இதுவரை ஓர் மேம்மனிதன் எனும்படியாக, குறைந்தபட்சம் மனிதனின்  உடல் எல்லைக்கு உட்பட்ட ஒரு ஆளுமையாக, அனைவரையும் திட்டமிடாமல் முழுதும் அரவணைத்து செல்லும் ஒரு புதிய தலைவனாக,  குன்று மேல் தனித்து இருக்கும் அரசனாக இல்லாமல் மக்களின் மனம் மற்றும் வாழ்வு தொட்டவனாக, ஒரு அழகனின் விளையாடல்கள் கதைகளின் வழியே வழிந்தோடி சென்றாலும் அதனின் கரைகளுக்குள் அடங்கதாதவனாக, மிக கூறிய புத்தி+தன்னுணர்வு +விழிப்புடன் இருக்கும் அந்த கணங்களில் வாழும் அரசனாக,  கணிக்க இயலா திசையில் பயணிக்கும் அடர் intution + புதிய அணுகுமுறை கொண்டவனாகவும் , ஒவ்வொரு காலத்திற்கு ஒரு trendsetter என வரும் ஒரு leaderஆக, எல்லோரயும் குறிப்பாக பெண்களை கவரும் இளைஞனாக , தான் விரிந்தபடி செல்கிறான்... 

இந்த ஒரு வரி கடவுளாக மாற்றாது என்று தோன்றுகிறது எனக்கு. நாம் அந்த நாளில் அவன் அருகில் இருந்திருந்தால் என்ன நினைத்து இருப்போம்?  பூர்சிவரஸ் போல் வியந்தோ சாத்யகி போல் கவனித்தபடி போல சென்று இருப்போம்... அவன் எல்லா இடத்திலும் மென் சிரிப்புடன் இருக்கட்டும். நாம் அந்த இருவரை போல வியந்தபடி, கவனித்தபடி செல்ல வேண்டியது தான். ....இப்போதைக்கு அவ்விதமே அந்த கரியவனுக்கு இடம்.  

ஜெயமோக கவிராயர் இந்த கடிதங்களை படித்தபடி இவனை மேழும் குழப்பி வளர்ப்பார் என நம்புவோமாக 

அன்புடன், லிங்கராஜ்