Tuesday, May 12, 2015

கனவிலிருந்து

அன்புள்ள ஜெயமோகன்

   
 
நண்பரை உங்கள் புத்தகத்த்தோடு வழியனுப்பி வந்திருக்கிறீர்கள். அவரை எனக்கு சிறிதுகூட தெரியாது என்றபோதிலும் ஒரு சகோதரனை இழந்ததைப்போல் இருக்கிறது எனக்கு. அவர் மனம் சாந்தியடைந்திருக்கும் என நினைக்கிறேன்.

    நானென்றால் எனக்கு  ஒரு புத்தகம் போதாது என்று தோன்றுகிறது ஒருவேளை வெண்முரசு வரிசை முழுதுமே அப்போது முடிந்துபோயிருந்தாலும் மீண்டும் மீண்டும் படிப்பதற்காக ஏதாவது ஒரு மரக்கிளையில் இருந்துகொண்டே இருப்பேன் என நினைக்கிறேன்.

 த.துரைவேல்

அன்புள்ள துரைவேல்

இதெல்லாம் ஒரு மனஎழுச்சிகள். ஒரு நூல் நமக்கு அத்தனை அணுக்கமாக இருப்பதே பெரிய வரம்தான். அத்தனை நூற்றாண்டுகளுக்குப்பின் நாமறியா இறந்தகாலத்தில் வாழ்ந்த பேராசான் ஒருவனை இன்று உணரமுடிகிறது அல்லவா?

ஜெ