ஆசிரியருக்கு ,
இந்த இரண்டு அத்தியாயங்களைப் படிக்கும்
போது ஒன்று தெரிகிறது , கிருஷ்ணன் ஒரு எல்லைகுட்பட்டு அவதார
சாயலுடனே தான் வெண் முரசில் படைக்கப் பட்டிருக்கிறான். அனைத்தையும்
அறிந்தவன் , அனைத்தையும் நிகழ்த்துகிறான்.
ஆனாலும்
தம்பியர் கூடித் தழுவுவதும், ஒன்றாக தமது தந்தையரைத் தழுவுவதும் மானுட
உச்சம். அது மேன் மக்களின் காவியச் செயல். இத்தகைய கதை சந்தர்பத்திற்காக
அல்லவோ நாம் காவியம் பயில்கிறோம்.
பரிதாபமாக
இங்கு தெய்வங்களுக்கு இடம் இல்லை , இந்த மகிழ்ச்சியையும் உணர்வுகளையும்
தெய்வங்களால் உணரவோ அனுபவிக்கவோ முடியாது , இத்தருணத்திற்காக வாரனவாத
சதிகூட உன்னதமாகிறது. மானுடம் வரம் பெற்றது , தெய்வங்கள் சபிக்கப் பட்டது.