Thursday, May 14, 2015

கனல் மையம்



ஜெ

வெண்முரசில் எனக்கு பிடித்தது நீலம். நான் நீலம் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். அதன்பின்னர் அரசியல்சதிகளை எல்லாம் நான் அதிகமாக கண்டுகொள்ளவில்லை. பிரயாகையில் திரௌபதியை நான் பக்தியுடன் மட்டும்தான் பார்த்தேன். நான் மனம் விரும்பி மீண்டும் வாசித்தது வெண்முகில்நகரம்.  பூரிசிரவஸ் பார்க்கும் இளவரசிகள் ஒவ்வொருவராகவும் நானே நடித்துக்கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. ஆனால் எல்லாருமே ஒன்றுதான்.

முடிந்தபிறகு போய் மீண்டும் நீலம் வாசித்தேன். பல இடங்களில் உடலே சிலிர்த்தது. நிறையவரிகளை கடந்துபோகவே முடியவில்லை

வேள்விக்கட்டைகள் கடைந்து கடைந்தெடுக்கும் கனல்.
வேங்கை விழியென மின்னி எழும் நீலச் சுடர். 
அவிதேடும் தென்னெருப்பு. 
வேத மொழிதேடும் எழுசுடர். 
வான வெளியெழுந்த முதல்கதிர். 
இவ்வனம் எரிக்கும் மின்மினி. 
இரவின் கிளையில் எழுந்த செம்மலர்.
இதழ் விரிந்து அமுதூறும் இன்மலர்.
கடலாழம் அறிந்த குதிரைமுகம். 
ஏழ்கடல் அள்ளி உண்ணும் குறுமுனிக் கமண்டலம். 
சிம்மக் குரலெழும் இருட்குகை. 
தன்னை தான் நோக்கும் தனித்த தவ விழி.

இந்தவரிகள் எதைக்குறிக்கின்றன என்று ஆரம்பத்தில் எனக்குப்புரிந்ததில்லை. இப்போது எதைக்குறிக்கிறது என்று தெரிந்தபோது படபடப்பாகிவிட்டது

செல்வி