அன்புள்ள ஜெ.
வெண்முகில் நகரம் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவத்தை அளித்தது. இரு சாதாரண கதாபாத்திரங்களின் வாயிலாக கதை கூறும் முறை நன்றாக இருந்தது. தூக்கம் வராமல் பழைய அத்தியாயங்களைப் படித்துக் கொண்டு இருந்தேன். மாத்ரி சிதை புகும் காட்சி கி.ரா வின் கோபல்ல கிராமம் நாவலில் வரும் ஒரு காட்சியை நினைவூட்டியது. அடுத்த பகுதியை எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள். தாமதம் ஆனாலும் பரவாயில்லை. நூறு கௌரவர்கள் அவர்களது மனைவியர் பெயர்களை இவ்வளவு நுணுக்கமாக யாரும் எழுதியதில்லை. இதே போன்று நிறைய விவரங்களுடன் விரித்து எழுதுங்கள். நன்றி.
தண்டபாணி தியாகராஜன்
அன்புள்ள ஜெ
வெண்முகில்நகரம் முடிந்துவிட்டது. எப்படியும் பத்துநாள் இடைவெளிவிடுவீர்கள். அந்த சமயத்திலே வாசிக்கலாம் என்று விஷ்ணுபுரம் எடுத்துவைத்து கௌஸ்துபம் தாண்டிவிட்டேன்.
வெண்முரசுக்குப்பிறகு யதார்த்தநாவல்களை வாசிக்கவேமுடியாமலாகிவிட்டது. அதெல்லாம் சாதாரணமான வாழ்க்கை என்று தோன்றுகிறது
சரோஜினி