அன்புள்ள ஆசிரியருக்கு,
நீலம்
வாசித்துக்கொண்டிருக்கிறேன். ராதையின் பித்து அச்சமூட்டுவதாக உள்ளது. அவள்
காண்பதெல்லாம் கண்ணன். கேட்பதெல்லாம் அவன் கீதம். அவள் எங்கிருந்தாலும்
அவனுடந்தான் இருக்கிறாள். அவன் எங்கிருந்தாலும் அவளுடன் இருக்கிறான்.
முதலில் இத்தகைய பித்து நிலை காவியங்களில்தான் சாத்தியம் என்று நினைத்தேன்.
பின் ஏன் இப்படி பித்து பிடித்து அலைகிறாள் என்று நினைத்தேன். இப்பொழுது
இந்த பித்து அச்சமூட்டுகிறது. பரிசுத்தமான பேரன்பின் முன் ஏன் மனம்
நடுங்குகிறது....
தன் வயிற்றில் பிறந்த மகனல்ல
என்று தெரிந்தும் கண்ணன் மேல் யசோதைக் கொண்டிருக்கும் பித்தைப்
புரிந்துகொள்ள முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்.
நீலம் பித்தின் நிறமா.......
நன்றி,
சங்கர்