Tuesday, September 8, 2015

கீதை

நான் மிகவும் மதிக்கும்  எழுத்தாளர் ஒருவர் சொல்வார்,  'கிருஷ்ணனின் பாகவதக்கதைகள் மகாபரதத்திற்கு பிற்காலத்தவை  கீதை கூட பிற்காலத்தில் எழுதப்பட்டு மகாபாரதத்தில் புகுத்தப்பட்டது' என்று. இப்போது அவர் எழுதும் மகாபரதத்தில் கிருஷ்ணன் தன் அத்தனை  லீலைகளோடு பேருருக்கொண்டு எழுகிறான். அத்துடன் எப்போதோ சொல்லப்போகும் கீதைக்கான பல்வேறு முன்னறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அந்தக் கள்ளப் பயல் கிருஷ்ணனின் லீலைதான் எல்லாம். அந்த நாத்திக எழுத்தாளர் வெகு சீக்கிரத்தில் ஆர்மோனியப் பெட்டியை தூக்கிக்கொண்டு பஜனைபடிக்கொண்டு செல்லப்போகிறார் என நினக்கிறேன். அப்போது நானும் பின்னால் போவேன். எனக்கு ஜால்ரா மட்டும்தான் அடிக்கத்தெரியும் (ஐயப்ப பஜனை அனுபவம்) என்பதால். உடன் வர விரும்பும் மற்றவர்கள் டோலக் மற்றும் சப்ளாக் கட்டைகளில் பயிற்சி பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். 

தண்டபாணி துரைவேல்