Wednesday, September 9, 2015

அகம்படி

அய்யா,
தங்களது வெண்முரசுவில் மகாபாரதத்தில் பாஞசாலத்தின் அமைச்சர் கருணர் தனது அகம்படியினருடன் தங்கி இருந்ததாக் உள்ளது.  அகம்படியினர் யார்? என்று தாங்கள் தயவு செய்து தெரிவிக்கவும்.

இப்படிக்கு
கூ.சிவகுமார்

அன்புள்ள சிவக்குமார்

அகம்படியினர் என்றால் ஆங்கிலத்தில்  retinue என்ற சொல்லுக்கான தமிழ். அரசனை அதிகராபூர்வமாகப் பின் தொடரும் அலுவலர்


சோழர்காலம் வரை கல்வெட்டுகளில் இச்சொல் இருந்தது. மலையாளத்தில் இச்சொல் இப்போதும் இதே பொருளில் புழக்கத்தில் உள்ளது


ஜெ