Monday, September 7, 2015

இந்திரநீலம் முழுமை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கிருஷ்ணன் தங்களுக்கு உள்ளே புகுந்து தனது லீலைகளை எழுதுகிறான். எனவே அச்சம், சோர்வு, பதற்றம், அனைத்தும் பறந்து விடும். 

எனக்கு மிகவும் பிடித்தது, தாங்கள் சிறு கதாபாத்திரங்களுக்கு தரும் முக்கியத்துவம் தான். சாத்யகி நான் மகாபாரதத்தில் மிகவும்  வியந்த பாத்திரம், கிருஷ்ணனுடன் கவுரவர் சபைக்கு தூது செல்லும் போது உடன் வந்தவன், விஸ்வரூபத்தை தரிசித்தவன், கிருஷ்ணனை தாங்கிக்கொண்டு வெளில் செல்கிறான். போரில் அவனது பங்கு மிகவும் சிறியதாக விளக்க படுகிறது. போரின் முடிவில் சாத்தியகி, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சுகின்றனர். ஆனால் தாங்கள் அவனை ஓரு உச்சியில் உட்கார வைத்து விட்டீர்கள். அவன் துவாரகைக்கு முதலில் சென்று, கிருஷ்ணனை சந்திக்கும் அந்த சந்திப்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. 

அடுத்தது பூரிஸ்ரவஸ். அவனுடன் நான் அனைத்து மலை நாடுகளிலும் பயணம் செய்தேன், பயணங்கள், காதல் தோல்விகள், வீரம், அவனது துரியோதனை நோக்கிய நட்பு, அனைத்தும் நாம் அருகில்  இருந்து அனுபவிப்பது போன்று இருந்தது.    

அதே போல் திரிஷ்டத்யும்ணன், தங்களது பாத்திர விவரிப்பு மிகவும் அருமை. அற்புதமான கதை களம், ச்யமந்தகம், விவாகங்கள், அஷ்டலக்ஷ்மிகள், 

ஸ்ரீராம்