சார் ,
எழுதழல் 41 அத்தியாயம் ரொம்ப பிடித்தது ,
முக்கியமா உத்திரை அபிமன்யு விடம் பேசும் விஷயங்கள் , கிருஷ்ணர் பேசுவதும்..
இந்த வரிகளை தினமும் பார்க்கணும் என்பதற்காக தனியா எடுத்து வைத்து கொண்டேன்
.// யோகம் என்பது யுஜ் என்னும் முதற்சொல்லின் விரிவு. அமைதல். இணைதலே அமைதலின் வழி. ஒன்று பிறிதென, பிற அனைத்துடன், அனைத்தும் ஒன்றென, பிறிது இல்லையென.”
“இப்புவியில் முற்றிணைய இயலாத எவையும் இல்லை என்றறிவதே ஞானம். இணைக்கும் வழியறிவதே ஊழ்கம். இணைந்தமைவது யோகம்” என்றார் இளைய யாதவர். ///
ராதா கிருஷ்ணன்