Wednesday, November 8, 2017

ஞானி




வெண்முரசின் முக்கியமான அம்சங்களில் ஒரு விஷயம் அதன் கதாபாத்திரங்கள் தனி நாவலின் கதாநாயகர்கள் போல உருவாகி முழுமையை அடைவது. அபிமன்யூ அவ்வகையில் பூரிசிரவஸ், சாத்யகி, திருஷ்டதுய்ம்னன் போல ஒரு முழுமையான கதாபாத்திரமாக உருவாகிவிட்டான். விளையாட்டுப்பிள்ளை, பொறுப்பற்ற இளைஞன் ஆக தோன்றினான். போர்நிபுணனாக விரிந்தான். கிருஷ்ணனால் ஆட்கொள்ளப்பட்ட பக்தனாக ஆனான். கடைசியாக இப்போது அர்ப்பணிப்பு வழியாகவே கர்மஞானியாக ஆகிவிட்டான்.

 இந்த வளர்ச்சியைத்தான் பல கதாபாத்திரங்களிலே பார்க்கிறோம். அவர்களின் அந்த வெற்றியைத்தான் வெண்முரசின் புனைவுகளில் முக்கியமனாது என நினைக்கிறேன். அபிமன்யூ கடைசியாக பிரத்யும்னனிடம் பேசும்போது முக்காலமும் உணர்ந்தவனாக இருக்கிறான். இனி அவனுக்கு எந்த சஞ்சலமும் இல்லை. அவனுடைய அந்த கடைசி உரையாடல் அற்புதமான ஒன்று.


ஜெயராமன்