அன்பின் ஜெ,
கிருஷ்ணையின் பொருட்டு படகில் நடந்த மற்போரில் விருஷசேனனிடம் சர்வதன்
தோற்றுபோனான் என்ற செய்தியை ஜீரணிக்க இயலாமல் கவலையுற்றிருந்தேன்.
{
“மானுடரின் பொதுவான கைகால் நீளம் இவ்வளவுதான் இருக்குமென்று வகுத்து மற்போர் கலை அமைந்துள்ளது. அக்கலை வகுக்காத உயரமும் நீளமும் உடையவர்கள் மண்ணில் பிறக்கையில் இப்படித்தான் ஆகிறது”.
}
இவ்வரிகளினூடாய் சற்றே சமாதானமடைந்தேன்.
பீமசேனன் வசுஷேணனிடம் தோள்கோத்து தோற்கும் சூழல் வந்தாலும்
"மூத்தவனிடம் தானே தோற்றான்" என்பதை தாண்டி என்னை
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
- யோகேஸ்வரன் ராமநாதன்.