ஜெ
மற்போர் பற்றி பிரதிவிந்தியன் “அவர்களின் உடலில் உள்ளமில்லை. அதை அகற்றுவதே பயிற்சி என்று சொல்கிறான். அவன் யுதிஷ்டிரனின் மகன். மூளைப்போராளி. அவன்
அப்படித்தான் சொல்வான். ஆரம்பம் முதலே யுதிஷ்டிரனுக்கு தம்பியின் மற்போர்த்திறன் பற்றி
அந்த எண்ணம்தான் உள்ளது. பீமனை மந்தா என்றுதான் அவன் அழைக்கிறான். அந்த மனநிலை அப்படியே
மகனிடமும் உள்ளது. அவன் நூல்வாசிப்பதனால் அப்படி எண்ணம் வருகிறதா அல்லது அப்படி எண்ணம்
இருப்பதனால் நூல்வாசிக்கிறானா என்பது சந்தேகம்தான்
அணிகொள்வதை முன்வைத்து
நடக்கும் அந்த உரையாடல் ஆழமானது. உபபாண்டவர்களின் மனநிலைகளைக் காட்டுவது. திருதராஷ்டிரனும்
யுதிஷ்டிரனும் பிரதிவிந்தியனும் ஒரேபோல அணிகொள்வதில் மிகுந்த அர்வம் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு அதிகார்ம் மற்றும் உலகியல் மீது உள்ள ஆர்வம் நீங்காமல் இருந்துகொண்டே இருப்பதை
அது காட்டுகிறது
சரவணன்