அன்புள்ள ஜெ
கிருஷ்ணன் கணிகரின்
பீடத்தில் சென்று அமர்ந்து அவரிடம் முகம் மலர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சி எனக்கு
அபாரமான ஒரு மன எழுச்சியை அளித்தது. அதைப்ப்ற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
இருளும் ஒளியும். கிருஷ்ணன் இருண்டிருந்த காலகட்டத்தில் கணிகரை மிக நெருங்கி வந்திருப்பார்
என நினைக்கிறேன். அவருக்கும் கணிகருக்குமான போட்டிதான் மொத்த மகாபாரதமும் என்று இப்போது
ஆகிவிட்டிருக்கிறது. அவருடைய இருக்கையில் அவருக்குப்பதிலாக கண்ணன் மட்டும்தானே அமரமுடியும்?
செல்வராஜ்