வணக்கம் ஜெமோ
தன் வாழ்வையே அர்ப்பணித்த இலக்குவனுக்கு என்ன கைம்மாறு செய்வது என்று யோசித்த இராமர் தன்னுடைய அடுத்த அவாதாரமான பலராமர் அவதாரத்தையே கொடுத்தார் என்பது செவி வழி செய்தி. மேலும் செய்தி துணுக்குகளாகவே, அவர் துரியனுக்கும் பீமனுக்கும் கதை கற்பித்த ஆசிரியர், மகாபாரத போர் தவறென்று எண்ணியதால் கண்ணனிடம் கோபித்துக் கொண்டு, போர் நடக்கும் போது சேத்திராடனம் சென்று விட்டார் என்பவை.
உண்மையில், வியாச பாரதத்தில் பலராமரின் பங்கு என்ன? நீங்கள் வெண்முரசில் சொல்லும் யாதவ பூசலும், பலராமர் தன மனைவி ரேவதியின் தூண்டுதலால் இளையவரைப் பிரிவதும் மூலத்திலும் உண்டா?
சுவேதா
அன்புள்ள சுவேதா
வெண்முரசு ஓர் அமைப்பைக் கொண்டுள்ளது. அதற்கு ஒரு மையத்தரிசனம் உண்டு. அது வேதாந்தத்தின் வெற்றியைப் பேசுவது. அதை ஒட்டி அது மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்கிறது. ஆகவே கதைகள் விரிவாக்கம் செய்யப்ப்பட்டிருக்கும். மேலதிக அர்த்தம் அளிக்கப்பட்டிருக்கும். இடைவெளிகள் கற்பனையால் நிரப்பப் பட்டிருக்கும். ஆனால் மூலக்கதை மாற்றப்பட்டிருக்காது. பலராமரின் கதாபாத்திரம் இப்படித்தான் மூலத்தில் உள்ளது. பிற்பாடு பல்வேறு எளிமையான புராணக்கதைகள் வழியாக பலராமருக்கும் கிருஷ்ணனுக்குமனா பூசல் மழுப்ப பட்டுள்ளது
ஜெ