Monday, November 20, 2017

கதை விரைவு



அன்புள்ள ஜெ


வெண்முரசு நாவல்களிலேயே விரைவான வாசிப்பனுபவம் அளிப்பது எழுதழல்தான். ஏனென்றால் மற்ற எல்லா நாவல்களுக்கும் ஒரு தொகுப்புவடிவம் உருவாகிவிட்டது. பலகதைகளை ஒன்றுடன் ஒன்று தொடுத்துக் கதைசொல்வது அவற்றின் பாணி. இந்நாவலிலும் உஷா பரிணயம் ஒரு துணைக்கதையாக வந்தாலும்கூட விரைவான ஒரே கதைப்போக்கு இருப்பதனால் அடுத்தது என்ன என்று காத்திருந்து வாசிக்கச்செய்கிறது. இப்படி பல ஆண்டுகள் ஒரு புனைவுக்குள் மூழ்கி வாழ்ந்துகொண்டிருப்பது மிகப்பெரிய அனுபவம் என்று தோன்றுகிறது. வெண்முரசு முடிந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் இல்லாமலில்லை



சாரநாதன்