Friday, November 10, 2017

அரசியல் விளையாட்டு



அன்புள்ள ஜெ

அபிமன்யூவுக்கும் யாதவர்களின் பிள்ளைகளுக்கும் நடக்கும் உரையாடல் மிகமுக்கியமானது. ராஜதந்திரத்தின் சூட்சுமங்கள் அவை என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் அவர்களின் நியாயங்களின் உச்சத்தில் இருக்கிறார்கள். உதாரணமாக சுதமர் போன்றவர்கள் அபிமன்யூவிடம் எப்படிஎல்லாம் சாம்பனை மடக்கவேண்டும் என சொல்லிக்கொடுக்கிறார்கள். அது சூட்சுமமாக இருக்கிறது. ஆனால் அவன் அங்கே சென்று சொல்வது அதை விட சூட்சுமமானது. ஆனால் அதற்கு சாம்பன் சொல்லும் பதில் இன்னமும் சூட்சுமமானது. 

இந்த விளையாட்டு ஒரு தர்க்கம் மட்டும் அல்ல. அவர்கள் எத்தகைய குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை இது காட்டுகிறது.அவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன நிலைபாடு கொண்டவர்கள் என்பதையும் காட்டுகிறது. ஒட்டுமொத்த யாதவர்களின் அரசியலையே தெளிவாகக் காட்டிவிடுகிறது


அரவிந்த் சுப்ரமணியம்