அன்புள்ள ஜெ
அஸ்தினபுரியில் நடக்கும் அந்த போர்க்கள விளையாட்டில் முன்பு அர்ஜுனன் சின்னக்குழந்தையாக
இருந்தபோது பாடப்பட்ட அதே வேதச்செய்யுள்தான் பாடப்படுகிறது அதை வாசித்தபோதே அர்ஜுனனை
அவர்கள் தலைக்குமேல் பறக்கவிட்டு விளையாடிய காட்சி நினைவிலெழுந்தது. அது பல ஆண்டுகளுக்கு
முன்பு. அப்போதிருந்த எவரும் இப்போது உயிருடனிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதையெல்லாம்
மறந்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் கடைசியில் அவர்கள் அர்ஜுனன் பெயரைச்சொல்லி
கூச்சலிடத் தொடங்கியபோது அவர்களின் உள்ளங்கள் மாறவே இல்லை என்பதைப்புரிந்துகொண்டேன்.
அது அச்சரிய அளிக்கவில்லை. ஏனென்றால் அவார்களின் மனதில் தர்மர், பீமன்,அர்ஜுனன் ஆகியோர்தான்
ஆழமாகப்பதிந்திருக்கிறர்கள்