Thursday, November 9, 2017

முரளியும் ராதையும்



அன்புள்ள ஜெ

முரளி ஒரு அசாதாரணமான கதாபாத்திரம். அதை உங்கள் சிறுகதை ஒன்றுடன் ஒப்பிட்டுத்தான் வாசகர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அது இயல்புதான். ஏனென்றால்நீங்களே அந்தச்சிறுகதையில் இருந்து அதை அடைந்திருக்கலாம். ஆனால் அத்தகைய வாசிப்பு அந்த கதாபாத்திரம் என்ன குறியீடு என்பதை வாசிக்கமுடியாமலாக்கிவிடும். அவன் ஐந்துபுலன்களும் அடைபட்டவன். ஆனால் குழலின் இசை மட்டும் கேட்கிறது. ஜடப்பிரபஞ்சத்தை வைணவம் அப்படித்தான் சொல்கிறது. முக்குணமும் சமானமாக நினையில் நின்றிருக்கும் பிரபஞ்சம். அது பிரம்மத்தின் நாதத்தை மட்டுமே கேட்பது.

அப்படிப்பார்க்கப்போனால் ராதை அதன் மறுபக்கம். அவள் அனைத்துக்குணங்களும் பொலியும் கோலாகலப் பிரபஞ்சம். அவள் பிரம்மத்தின் நாதத்தை தானே எழுப்பி அவனை வழிபடுபவள்.  அவனை ஆராதிப்பவள்.  இந்த இரு எல்லைக்குள் அவன் 80 மைந்தர்களும் இருக்கிறார்கள். அதை 80 வகை நிலைகள் என்று சொல்லலாம்

சுவாமி