Tuesday, March 27, 2018

குருதிச்சாரல்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 

என் வணக்கங்கள் .தங்களின் வெண் முரசை படித்த பிறகு தான் மற்ற அலுவல் என்றிருந்த உங்கள் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன்.குருதி சாரலில் இளைய யாதவர் நிகழ்த்திய ஞான வேள்வியை இன்னும் பிரமிப்புடன் தான் படித்து வருகிறேன் .மஹாபாரதத்தை இவ்வளவு விரித்து எழுதிய சாதனைகளை நிகழ்த்திய தங்களிடமே வெறுமை உணர்வுகள் மிகுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .என் போன்ற வாசகர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக தான் தோன்றுகிறது .பிழையெனின் பொறுத்தருள்க  உங்களின் சாதனை எங்களுக்கு இமயத்தின் முடிகளை விட உயரமானது .வெறுமை உணர்வில் மீண்டு வந்து அடுத்த வெண் முரசு நாவலை தொடங்க இருப்பது மிக்க மகிழ்வை தருகிறது .பல வாசகர்கள் கூறியதை போல சில நாட்கள் தங்கள் இணையமே தொடர்பை காண்பிக்காதவேளையில் நான் அனுபவித்ததும் வெறுமை உணர்வுகள் தான்.மீண்டும் தங்களின் பதிவுகள் - இமையத் தனிமை படித்தவுடன் நான்  காத்திருந்த காலங்கள் மறந்தேன்.தங்களின் சாதனை பயணத்தில் இத்தகைய சிறு சிறு இளைப்பாறுதல்கள் அவசியம் தான் .வாசகர்கள் நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறோம் தங்களின்  வெண்முரசு–நூல் பதினேழு- இமைக்கணம் மலரும் நாளை நோக்கி . தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கும் போது பக்கம் பக்கமாக  எழுதவேண்டும் என்று எழுத துவங்குவேன் .ஆனால் தங்களின் அன்றாட எழுத்துப்பணிக்கு அது சிறு இடையூறாக கூட மாறாக்கூடாது என்ற  நினைப்பு வந்ததும் சுருக்கமாக அமைந்து விடுகிறது . நன்றி ஜெயமோகன் அவர்களே 

தி .செந்தில் 
ஸ்ரீவில்லிபுத்தூர்