Friday, March 30, 2018

அடிப்படைவினா




அன்புள்ள ஜெ

இன்றைய அத்தியாயத்தில் கர்ணன் சொல்லும் ஆவேசமான கேள்விகள், வாதங்கள் எல்லாம் வேதாந்தம் மீது எப்போதுமே சாதாரணமானவர்கள் முன்வைப்பதுதான். இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமா என்ற கேள்வி எழாமல் வேதாந்தத்தைப்பற்றிப் பேசவே முடியாது. அன்றாடவாழ்க்கையைக் கவனிப்பவன் இந்தத் தத்துவமெல்லாம் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் முலாம்பூசுவதே என்றுதான் நினைப்பான். மார்க்சிய தத்துவவாதிகள் இதைத்தான் சொல்கிறார்கள். தேபிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்கள் இந்தியத்தத்துவத்தில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும் போன்ற நூல்களில் இதையே ஒரு நிலைபாடகச் சொல்கிறார்கள். மக்கள் ஒடுக்கப்படுகையில் பசிக்கையில் இதெல்லாம் என்ன கொடுக்கும் என்பதுதான் வேதாந்தம் எதிர்கொள்ளவேண்டிய முதல்கேள்வி

ஜெயச்சந்திரன்