Thursday, March 1, 2018

அளவைவாதம்,வேதமுடிபுவாதம்




அளவைவாதம் வேதமுடிபுவாதம்  என இரு தரப்புகள் பேசப்படுகின்றன. அவற்றுக்கான பொருள் என்ன. அதாவது சம்ஸ்கிருதப்பொருள்? வேறு தர்க்கங்களுடன் பொருத்திக்கொண்டு யோசிப்பதற்காகவே கேட்கிறேன்

ஜெயராமன்

அன்புள்ள ஜெயமோகன்

அளவைவாதம் என்றால் பூர்வமீமாம்சை. அதாவது வேதநூலை முதன்மையாகக் கொள்பவர்கள்.வேதச் சடங்குவாதிகள்.  வேதமுடிபு என்றால் வேதாந்தம். அதாவது உத்தர மீமாம்சம். பிரம்மவாதம் என்றும் சொல்லலாம். பூர்வமீமாம்சகர்கள் வேதங்களின் கர்மகாண்டத்தையும் உத்தர மீமாம்சகர்கள் ஞானகாண்டத்தையும் முதன்மைப்படுத்துபவர்கள். கர்மம் என்பதே செயல். அதில் வேள்வி, பூசை, வழிபாடு ஆகிய அனைத்தும் அடங்கும்

ஜெயமோகன்