Monday, March 26, 2018

புழுவும் குருவியும்


ஜெ

குருதிச்சாரல் மகாபாரதம் ஆதிபர்வத்திலுள்ள காலன் இல்லாத காலம் என்னும் விந்தையான கற்பனையிலிருந்து தொடங்கியிருக்கிறது. மனிதர்கள் இறப்பு இல்லாமல் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதே அங்கே சொல்லப்பட்டது. உயிர்க்குலமே அதன் ஒழுங்கையும் நோக்கத்தையும் இழந்துவிட்டது என்பது ஆச்சரியமான கற்பனைதான். அதிலும் அந்தப்புழுவும் பறவையும் பேசிக்கொள்ளும் இடம் கவித்துவமானது. பறவையின் சிறகுகள் புழுக்களுக்கு உரியவை என்பது ஒரு நவீனக்கவிதைபோல உள்ளது

செல்வன்