அன்புள்ள ஜெ ,
மழைப்பாடலில் வரும் சுகோணன் , சுபிட்சன் எனும் இரு பருந்துகளின் கதையை வாசித்ததிலிருந்து 'விதியின் ஜாலம் ' எனும் வார்த்தை இரண்டு நாட்களாக என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது . ஒரு காரணம் பசியால் சாகவிருந்த பருந்துகள் பின்பு அரசனின் காருண்யத்தால் வலுவானதாக மாறுவது , இன்னொரு காரணம் சகுனி தனக்கு வந்த தூதை தானறியாமலேயே ,தன் செயலான பருந்தை அம்பெய்த செயல் மூலம் இழப்பது , அந்த இழப்பின் கடைசி நுனியான நாசிகன் தூது கடிதத்தை உண்ணும் இடத்தில் கூட அறியாமல் அதே சமயம் உள்ளுணர்வால் உணர்ந்து நிற்பது , ஒருவேளை தூது அவர் படித்திருந்தால் வரலாறே மாறியிருக்கும் , விதியின் விளையாட்டு என இதை நினைத்தேன் அல்லது விதியின் விளையாட்டு மைதானத்தின் சோழிகளாக கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் என .
முன்பு ஒரு முறை நேர்பேச்சில் மார்த்தாண்ட வர்மாவின் பிராமண அமைச்சர் கதை பற்றி சொன்னீர்கள் , அசோகவனத்தில் வரும் பகுதிகள் என சொல்லி . இந்த பருந்துகளின் கதை வாசித்த போது ஏனோ அது ஞாபகம் வந்தது .
இந்த பருந்தின் கதையில் முன்பு வந்த உவமை கதையான சிங்கம் பசு கழுதை புலிகள் கதையும் இணைந்து கொள்கிறது , இதன் ஆழம் இன்னும் பிடி கிடைக்க வில்லை , அநேகமா சீக்கிரத்திலேயே கண்டுபிடித்து விடுவேன் :)
ராதாகிருஷ்ணன்