ஜெ
ஒருபடைநகர்வின் அனைத்துப் பக்கங்களையும்
சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என்று நாவல் முன்னகர்கிறது. கதையோட்டத்திற்கு தடையாக
இருந்தாலும் இன்று பானுமதி வழியாக அஸ்தினபுரியின் படைகள் போருக்குப்போனபின்னர் அங்கே
எப்படி நிர்வாகம் நடந்தது என்று காட்டும் சித்திரங்கள் அழகாக இருந்தன. ஊர்களனைத்தும்
பெண்களால் ஆட்சிசெய்யப்படுகின்றன. அதற்காகக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு நெருக்கடி
வரும்போது உருவாகும் பலவகையான சிக்கல்கள், அந்தச் சிக்கல்கள் எபப்டி மேலிருந்து கீழே
செல்லும்போது பெருகும் என நுணுக்கமான ஏராளமான செய்திகள். கதையை எதிர்பார்த்து வாசித்தபோது
சின்ன ஏமாற்றம் வந்தது. ஆனால் திரும்பவும் வாசித்துக்கொண்டிருந்தேன்
ராஜசேகர்