சங்கனும் ஸ்வேதனும் வந்த உடனேயே தோன்றியது.. வெண்முரசில் முதன்மை பாத்திரங்களுக்கு இணையாக எழுந்து வரும் பாத்திரங்கள் உண்டு. ஒரு புத்தகத்திற்கு குறைந்தது ஓர் இருவரேணும் அப்படி சொல்லலாம். இவர்கள் இருவரும் அப்படி வர போகின்றவர்கள்.
ஒரு முனையில் நூற்றுவரும் ஆயிரம் உப கௌரவருமாய் கிளம்புகையில் இன்னொரு முனையில் குலாந்தகர்கள் நாடு முழுவத்தில் இருந்தும் கிளம்புகின்றனர் என்றே எடுத்து கொள்கின்றேன்.
அல்லது, பீமனும் அபிமன்யுவும் கொன்று தீர்க்க போகிறார்கள்.. இந்த பக்கமும் களம் பட ஆயிரத்து நூறு வேழங்கள் வேண்டுமே!
எல்லாம் பலி, படையல்.. நினைகயிலேயே நடுங்குகிறது.
இன்னும் சங்கனும் ஸ்வேதனும் வளரும் பாத்திரங்கள், பொறுத்து பார்ப்போம்.
நன்றி
ராகவ்