ஜெ
மிகச்சரியாக பானுமதி விதுரரை புரிந்துகொள்கிறாள். அறத்தின்மேல் பற்றுகொள்க! பேரறத்தானாக நின்றிருக்கும் இளைய யாதவர்மேல் பற்று கொள்க! நீங்கள் கொண்ட பற்று அதுவல்ல. அது நீங்கள் கைக்கொள்ள முனைந்து ஊழால் தவிர்க்கப்பட்ட ஒன்று. அது நீங்களே சற்று முன் சொன்னதுபோல் வெற்றாணவம் மட்டுமே என்று மிகக்கறாராகச் சொல்கிறாள். அவருடைய உள்ளம் அவளுக்கு அவ்வளவு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. விதுரர் எதனால் ஆட்டுவிக்கப்படுகிறார் என்று புரிந்துகொள்வது எளிது. அவர் அரசனாக ஆகமுடியாதுபோன அரசன் என்று தன்னை நினைத்துக்கொள்பவர். ஆனால் அரசனாக ஆகும் தகுதியும் இல்லாதவர். அவருடைய ஞானம் எல்லாம் இந்த ஆசையாலேயே அர்த்தமற்றவையாக ஆகிவிட்டன
மகேஷ்