Tuesday, July 17, 2018

பொருட்கள்



ஜெ ,



திருதராஷ்டிரன் இசை கேட்கும் அறையில் பொய் சாளரங்கள் (  ஜன்னல்  )  இருந்தன என வந்தது , முதலில் புரிய வில்லை , பிறகு புரிந்தது , திரை அரங்கின் சுவர்களில் இருக்கும் ஒலிவாங்கிகள் , எதிரொலி வராமல் இருக்க உதவுபவை  .
பொய் சாளரம் -  அழகான பெயர்  :)


மழைப்பாடல் துவக்கத்தில்  பீதர் நாட்டில் இருந்து காந்தாரம்  வழியாக பட்டு , ஓலைதாள் , உயர் இனிப்பு  போன்றவை செல்கின்றன என வருகிறது . ஓலைத்தாள் என்பது காகித தாளா ?  உயர் இனிப்பு என்பது சர்க்கரை  னு நினைத்து கொண்டேன் !

ராதாகிருஷ்ணன்


ராதா,

ஓலைத்தாள் என்பது பாப்பிரஸ் என்னும் புல்லின் இலை. எழுதுபொருள். தாள் என்றாலே புல்லின் இலை என்றுதான் பொருள்

உயர் இனிப்பு என்பது கற்கண்டு. சீனர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெல்லத்தை கொதிக்கச்செய்து கற்கண்டு எடுக்க ஆரம்பித்திருந்தனர்

ஜெ