ஜெ
ஒவ்வொன்றும் வெண்முரசில்
குறியீடுகளாக ஆகின்றன. அவற்றை நீங்கள் அப்படி அமைக்கவேண்டியதில்லை. அவை சொல்லும் விதத்திலேயே
அப்படி ஆகிவிடுகின்றன. ஏனென்றால் உணர்ச்சிகள் அனைத்தும் எல்லா பொருட்களிலும் பரவியிருக்கும்
ஒரு சூழல் வெண்முரசில் உள்ளது. ஆகவே குறியீடுகளாக ஆகிவிடுகின்றன. உதாரணமாக பாஞ்சாலியும்
அசலையும் உப்பரிகையில் அமர்ந்து துரியோதனன் விடைபெறுவதைப் பார்க்கும்போது வௌவால்கள்
குறிப்பிடப்படுவது. கூடவே புறாக்களும் வருகின்றன. புறாக்களின் பார்வையில் ஒருவரும்
வௌவால்களின் பார்வையில் ஒருவரும் மேலே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். புறாக்களுக்கு
அக்கறை இல்லை. வௌவால்கள் தலைகீழாகப் பார்க்கின்றன.
மகாதேவன்