ஜெ
வெண்முரசிலேயே துயரமான
காட்சிகளில் ஒன்று ஆயிரம் பேரன்களும் நூறு மகன்களும் காந்தாரியிடமும் திருதராஷ்டிரரிடமும்
விடைபெறுவது. காந்தாரி உணர்ச்சியே இல்லாமல் அறம் வெல்க என்று சொல்கிறாள். ஆனால் திருதராஷ்டிரர்
மகன்களின் அப்பாவாகவே இருக்கிறார். அவருடைய பார்வையின்மை அப்போது அறத்தைப் பார்க்கவிடாமலாக்குகிறது.
அந்த விடைபெறல்காட்சி ஒரு பெரிய சம்பிரதாயச் சடங்கு போலக் காட்டப்படுகிறது. பதற்றம்
கொள்ளச்செய்கிறது. ஆனால் உணர்ச்சிகள் ஏதும் காட்டப்படுவதுமில்லை. ஒரு அழுத்தமான பதிவை
அந்தக்காட்சி உருவாக்கியது
ராம்