அன்பு ஜெ ,
சுருதகீர்த்தி ,ஸ்வேதன் இவர்களுடனான "அரவானின்" காட்சி சித்தரிப்பும் , எழுச்சி வாதங்களும் தங்களுக்கே உரித்தான நடையில் மிளிர்வுடனே வந்துள்ளது. அவனுக்கு பீடம் மறுத்து சுருதகீர்த்தி எழுப்பிய ஆணவ வினாவிற்கு ஸ்வேதனின் பதிலடிகள் அபாரம்.ஆனால் சிறிது முன்பு , உதடு மடிந்தும் ,கைகோர்த்து பணிவிச் சித்திரமாக காட்சியளித்த அரவானைப் பார்த்து தவறான மதிப்பூனூடே ,இறுதியில் அவனின் தருக்கியபுன்னகை யைப் பார்த்து , அவனடைந்த மெல் அதிர்வே சிறப்பானதாகும்.அவன் இவர்களையெல்லாம் மதித்து நடந்ததே கொடையென்று குறித்ததும் நன்றே!
படிக்கும்போது ஓர் ஒவ்வாமை தோன்றிக்கொண்டேயிருந்தது.பெரும் போருக்கு தன் மகனை ஓர் தாய் அனுப்பி வைக்கிளாளென்றால் ,சாதாரண விஷயமா? அதுவும் உலூபி போன்றோளுக்கு.ஸ்வேதனின் அணுக்க பேச்சால் அதிராமல் புன்னகையுடன் அவனை நோக்கியதும் , களம் நிற்க தகுதியானவனே என்று ஸ்வேதனும் நிச்சயித்து , எழுந்து நின்றதே அபாரம்! தாயனதான ஷத்திரிய வளர்ப்பிற்கு ஓர் நல்லுதாரணம்" அரவான்."
அன்புடன் ,