அன்புள்ள ஜெ
வெண்முரசின் இந்த அத்தியாயம்
என்னைக் கலங்கடித்துவிட்டது. காந்தாரி அறம் வெல்க என்று சொல்வது எதிர்பார்த்த ஒன்றுதான்.
ஆனால் அது நிகழ்ந்தபின்னர்தான் அப்படித் தோன்றுகிறது. அவள் கடைசிநிமிடத்தில் மகனை வெற்றிகொள்க
என்று வாழ்த்தினாலும் வாழ்த்தியிருக்கக்கூடும். ஏனென்றால் அவள் பேரன்னை. இந்த முரன்பாடு
எப்போதுமே வெண்முரசில் இருக்கிறது. மனித மனதின் விசித்திரங்களைச் சொல்லிவிடமுடியாது
என்பதைத்தான் வெண்முரசு காட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அத்தியாயம் ஒரு கவிதைபோல இருந்தது.
மிகமிக அண்டர்பிளே செய்தும் எழுதப்பட்டிருந்தது. காந்தாரியின் மனம் என்னஎன்று தெரியவில்லை.
அவள் முகம் மட்டுமே வாசகனுக்குக் காட்டப்படுகிறது. அதுவே ஒரு ஓவியம் மாதிரி நின்றிருக்கிறது
மனதில்
ராஜசேகர்