Friday, July 20, 2018

இரண்டு அனல்கள்



தென்னெரி இல்லங்களில் எரிவது. வடஎரி வானில் திகழ்வது. இரண்டு எரிகள். இரண்டுக்கும் நடுவே அலைக்கழிபவன் நான். என்று விதுரர் சொல்கிறார் குந்தி சுருதை என்னும் இரண்டு அனல்கள் அவரை ஆட்கொள்கின்றன. ஒன்று வீட்டு விளக்குச்சுடர். இன்னொரு வடவைத்தீ. ஊழியாக ஆகி எரிப்பது. ஆனால் அவரால் அதைத்தான் நாடமுடிகிறது.

தென்னெரிகள் அனைத்திற்கும் அனல் அளிப்பது வடக்கே எரியும் ஊழிக்கனல்தான். பெருவெள்ளம் எழுந்து ஊற்றுகளையும் கிணறுகளையும் நிறைப்பதுபோல் வடஎரி எழுகையில் தென்னெரி மறைந்துவிடும் என்று விதுரர் சொல்கிறர்.அது ஒரு மனக்குழப்பம். அந்த மனச்சிக்கல் தான் அவருடைய துக்கமாக ஆகிறது

சுவாமி