Saturday, July 21, 2018

அந்த வாழ்த்து




அன்புள்ள் ஜெ

காந்தாரியின் அந்த வாழ்த்து மகாபாரதத்திலேயே ஒரு பின்னிணைப்பாக பின்னாடித்தான் வருகிறது. கிருஷ்ணனிடம் காந்தாரி அழுதபடியே கேட்கிறாள். கிருஷ்ணா நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என் பிள்ளைகள் எல்லாம் சாகவேண்டும் என்று. அதற்கு கிருஷ்ணர் “நீ துரியோதனன் வாழ்த்து பெற வந்தபோது விஜயீஃபவ என்று சொல்லவில்லை. தர்மம் ஜய என்றுதான் சொன்னாய். நீ பெரும்பத்தினி. உன் சொல் பலித்தது என்றார். அந்தக்கதையை முன்னரே கொண்டுவந்து உணர்ச்சிகரமான ஒரு தருணமாக ஆக்கிவிட்டீர்கள். அற்புதமான ஓர் இடம் அது.

ஜெயராமன்