ஜெ.......
"நீங்கள் என்னை தொட்டிருந்தால் நான் பிறிதொருவனாக ஆகியிருப்பேனா? இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா?”
ஜயத்ரதனுடைய இந்த மனநிலைல தான் என்னோட பாதி நாட்கள் போகும்...ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் இன்னும் பரிவுடனிருந்திருந்தால் ஒரு வெற்றிகரமான லௌகீக வாழ்க்கைக்குள்ள விழுந்திருப்பன்....என்னவோ ஒரு காரணத்தினால எனக்கு ஏற்பட்ட தனிமை தான் என்னை இலக்கிய பக்கம் ஆற்றுப்படுத்திருக்குனு தோன்றும்....அதனால பெற்றோர்க்கு நன்றி தான் சொல்லிக்குவன் எப்போதுமே....
கடந்த மூன்று நாட்களுமே
//“நீங்கள் என்னை தொட்டிருந்தால் நான் பிறிதொருவனாக ஆகியிருப்பேனா? இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா?”//
இதே கொந்தளிப்போடதான் இருந்தேன்.....இன்னிக்கு உங்க எழுத்தால என்னோட உணர்வுகள பார்த்தபோது " மகிழ்வோ துயரோ நிறைவோ" மனசு கொஞ்சம் அமைதி அடைந்தது......எந்நிலையிலும் வாசிப்பு என்னை மீட்டெடுக்கும் ங்குற நம்பிக்கை இன்னும் வலுப்பெற்றிருக்கு
எல். கிருஷ்ணன்