ஜெ
வெண்முரசில் ஒவ்வொருவரும்
அவர்களின் இறப்பின் நாளில் எப்படி உணர்கிறார்கள் என்பதை மட்டும் தனியாக ஆராயலாம்
என தோன்றுகிறது அபிமன்யூ இறக்கும் நாளில் காலையில் எழும்பவே விரும்பவில்லை. அவன் போருக்குச்
செல்லவே சோம்பல்படுகிறான். ஆனால் பூரிசிரவஸ் அன்று காலையிலேயே விட்டுச்செல்க என்று
ஆணை தன்னுள் இருந்து எழுவதைப் பார்க்கிறான். எதைவிட்டுச்செல்ல, எங்கே செல்ல என்று
தனக்குத்தானே கேட்டுக்கொண்டாலும் அதன் பொருள் என்ன என அவனுக்கு நன்றகாவே
தெரிந்திருக்கிறது.
ராஜ்