Tuesday, February 5, 2019

அபிமன்யூ மறைவு



அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

      
இன்றைய அபிமன்யூ மறைவு உக்கிரமானது. கர்ணன் இருக்க துரியோதனிடம் வில்லும் , தேரும் , ஆவநாழியும் கேட்டது ஏன் என்ற வினா மனதில் எழுந்தது?
      

தந்தை என்பதினால் மட்டுமே என தோன்றவில்லை. துரியனும் கர்ணனுக்கு இணையான பெருங் கொடையாளி எனும் எண்ணம் அவனுடைய மனதில் பதிந்துள்ளதுதான் காரணமா ? தெரியவில்லை.
     
 துரோணரின் எல்லை மீறல் அவருக்கு மட்டுமல்ல எனக்கும் திகைப்பை ஏற்படுத்துகிறது. அணுக்கமான எவர் மீதும் உள்ள கசப்பு தான் என நினைக்கிறேன். அர்ஜுனன் மீதுள்ள கசப்பே அபிமன்யூவின் மேல் எழுந்ததா அல்லது தன் சிறந்த சீடனைக் காட்டிலும் சிறந்த வில்லவன் என்பதால் உருவானதா என்பதும் தெரியவில்லை.
      
கர்ணனின் சீற்றம் அர்ஜூனின் இளந் தோற்றமாக காணப்பட்ட அபிமன்யூவை கண்டதனால் மட்டுமல்ல, உள்ளுக்குள் இருந்த அவமானத்தின் நஞ்சு. தலை சிறந்த வில்லாளியாக இருந்தும் அவமானம் ஏற்படுகின்ற நிலை இருப்பதும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
  
அன்புடன்
  தே. குமரன்


  தருமபுரி .