Thursday, February 14, 2019

விடுதலை.




அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று கார்கடல் 50 ம் அத்தியாயம் வாசிக்கும்போது பீமன் துரியோதனனை வீழ்த்த எண்ணி அவனது தம்பியரை மண்டையை உடைத்து  கொல்கிறான். குருஷேத்ரபோரில் தாங்கள் எதிரிகள் என்று நினைப்பவர்களின் மனதில் பயத்தை விதைக்க , அவர்களை பலவீனபடுத்த அவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களை தான் அவர்களின் கண்முன் கொல்கிறார்கள். துரியோதனனுக்கு தனது மகன்களை விட தம்பிகளே முக்கியம். பிறந்தது முதல் குருஷேத்ரதிற்கு முன் வரை தம்பிகள் அவனது பலம். ஆனால் குருஷேத்ரத்தில் அவர்கள் பலவீனம். எத்தனைதடவை பீமனால் தம்பிகள் கொல்லபடுவதை கண்டு பின்வாங்கி இருக்கிறான். முதலிலேயே அர்ஜுனனின் மகனை பலி கொடுத்துதான் குருஷேதரம் ஆரம்பிக்கிறது. அது பாண்டவ படைகள்  மொத்தமாக தங்களை திரட்டிக்கொள்ள. பிறகு போரில் ஒரோர்நாளும் யாரோ ஒருவனின் மகன் தந்தையின் கண்முன்னாலே தலை அறுபட்டு, நெஞ்சில் அம்பு வாங்கி, தலை சிதறி சாகிறான். அதில் பீமனும் அர்ஜுனனும் முதலில் அரசர்களை விட அவர்களின் மகன்களைதான் கொன்று குவிக்கிறார்கள். மகன்கள் இறந்ததும் அரசர்கள் விசை இழந்து அப்படியே நிற்க அவர்களின் தலையும் உருள்கிறது.  இது இன்றைய நவீன போரில் கம்மி வானில் இருந்து குண்டுகளை தூவி கொத்து கொத்தாக கொல்வதும்  துப்பாக்கியால் கண்முன் நிற்கிறவர்களை சுட்டு கொல்வதும் நடக்கிறது.  நேருக்கு நேர் நின்று அதுவும் அனைவரும் ஒத்த வலிமையோடு இருக்கும்போது அவர்கள் மட்டும் போரிட்டுகொண்டிருந்தால் வருடம் முழுதும் நீடிக்கும். ஆதலால் தான் பலத்தை விட பலவீனங்களை குறிவைக்கிறார்கள். இப்படி  மைந்தர்கள் தான் முதலில் சாவார்கள் என்பதை தடுக்க பெண்கள் போராடுவது ஒரு நாவலாகவே வெண்முரசில் இருக்கிறது. முதலில் அந்த கதைகளை வாசிக்கும் போது இது ஏன் இவ்வளவு விரிவாய் செல்கிறது என .இன்று அவர்கள் பயந்ததுபோல் தான் நடக்கிறது. மைந்தர்கள்தான் முதலில் கொல்லபடுகிறார்கள்.
 
குருஷேத்திரத்தில்  நடப்பது நேருக்கு நேருக்கு நடக்கும் யுத்தம். விலங்குகளும் சேர்ந்து நடத்துவது.  அனைவரும் தாங்கள் நேசித்தவற்றை இழக்கிறார்கள். அது எதிரிக்கு பலம். இழந்தவனுக்கு பலவீனம். ஆனாலும் இழந்த துரியோதனன் அர்ஜுனனை நோக்கி கடுமையாக போர்புரிகிறான்.ஒருவகையான விடுதலைதான் போலும்.வெண்முரசு சொல்வது போல் " இங்கு நம்மை கட்டி இருக்கும் அனைத்தில் இருந்தும் விடுதலை " என்னும் கருத்தை கொண்டால் அனைவரும் நிறைய இழந்து விடுதலை அடைந்தே இறகுபோல சாய்கிறார்கள். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இதற்க்கு முந்தைய அத்தியாயங்களில் அவர்கள் பயன்படுத்திய தங்களின் அஸ்திரங்களின் மூலம் அவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. போர் என்பது உணமையிலே விடுதலைதான். நமது பலம் , எல்லைகள், இழப்புகளுக்கு பின் மிஞ்சுவது, பெற்றது என அது ஒரு விடுதலை.  துரியோதனனுக்கு விகர்ணன் இறந்தது குறித்து அவனே கூறுவதுபோல் " அவனை மனிதாக கொஞ்சமாவது மண்ணில் கட்டியிருந்த சரடு அவனது சொற்கள் " .இனி அவனுக்கு அதில் இருந்து விடுதலை.

கர்கடலின் 51ம் அத்தியாத்தில் கர்ணன் பீமன்மூலம் தனது மகன்களை இழப்பது கர்ணனுக்கு இன்னொரு விடுதலை.  பீமனுக்கு என்ன காத்திருக்கிறதோ?  முக்கியமாய் அவமானத்திற்கு அஞ்சும் கர்ணன் பீமனின் மூலம் அவமானத்தின் உச்சதிற்கே கொண்டு செல்லபடுவதும் விடுதலையே.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்