ஜெ அவர்களுக்கு
வணக்கம் கார்கடல் அனைவரும் தங்கள் எல்லைகளை காணும் வெ ளியாக உள்ளது.அர்சுனனுக்கு அபிமன்யூ. சுருதகீர்த்தி ஆரம்பம் முதலே தந்தை அன்புக்கு ஏங்குபனாய் வருகிறான். தன் தந்தை அபிமன்யூ மேலே மட்டும் அன்பு உள்ளது என நினைகிறான்.அரவான் மீதும் அதே வெருப்பு அடை கிறான். அபிமன்யூ மரணத்தின் பின் தன்னுடன் சுருதகீர்த்தியை இருக்க கூறும் ேபாது அபிமன்யூகாக முதல் முறை அழுகிறான் சுருதகீர்த்தி.அபிமன்யூ இறக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுல் இருந்தி இருக்கவேண்டும்
பெ ரும் வீரர்கள் மரணம் எல்லாம் அங்கே பாெ ருள் இல்லாததாக பாேகிறது.பூரிசிரவஸ் மரணம் ஏதாே மனதை கலங்க செய்தது.தலையை வெட்டிய பின்னும் அவன் உயிர் பாேகவில்லை.வெட்டிய கை சின் முத்திரைசெய்கிறது. காணும் யாவருக்கும் அவன் தலை உயிராேடு இருப்பதாய் தெரிகிறது.சிதை தீயில் தான் அவன் உயிர் வெளியே செல்கிறது. சாத்யகி பூரிசிரவசை காெல்வதை திருஷ்டதுய்மனன் காண்கிறான்.அவனும் அதையே துராேணருக்கு செய்ய பாேகிறான்
த.குணசேகரன்