ஐயா
அர்ஜுனனும் கர்ணனும் சண்டை போட்டுக் கொள்ளத் தொடங்கும்போது கிருஷ்ணர் சொல்கிறார் நீ அவனுக்கு நிகரானவன் இல்லை என்னால் மட்டுமே அவனை எதிர்கொள்ள முடியும் என்று அப்பேர்பட்ட கர்ணன் பீமன் முன் நிற்கின்றான்
பீமனை கௌரவர் படைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது
அதே சமயத்தில் பீமனை கொன்றுவிடக் கூடாது
பீமனைக் கொல்ல மாட்டேன் என்று குந்திக்கு வாக்களித்தது பீமனுக்கு தெரியாது எனவே அவன் கர்ணனையும் அவன் மகன்களையும் கொன்று விடவே நினைப்பான்
அதுவரை தலை குனியாத கர்ணன் ஏழுமுறை தலைகுனிந்தான் தன் கண்முன்னே தன்னுடைய மகன்கள் கொல்லப்படுவதை பார்த்தான் பீமனால் காரித்துப்பப் பட்டான்
இதை எளிமையாக எதார்த்தமாக எழுதி இருந்தாலே மிகவும் உணர்ச்சிகரமாக இருந்திருக்குமே அதை விட்டுவிட்டு பாம்பு கதை சொல்லி விட்டீர்களே!!
நன்றி
பூபதி