அன்புள்ள ஜெ
குந்தி கர்ணன் சந்திப்பு ஒரு அபாரமான நிகழ்ச்சி. நீங்கள் அதை மூன்று அத்தியாயங்களிலாகச் சொல்லியிருப்பதே மகாபாரதத்தில் அது எந்த அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக்காட்டுகிறது. அதில் மகாபாரதத்தில் உள்ள எல்லா சிக்கல்களும் வெளிப்படுகின்றன
1 சாதி. குந்தியே சொன்னாலும்கூட பாண்டுவின் மகன் என்ற அந்தஸ்து இல்லாவிட்டால் கர்ணன் ஷத்ரியன் அல்ல. அவன் யாதவன். அவனை அரசனாக்க முடியாது. ஆகவே அவள் அவனிடம் சும்மாதான் சொல்கிறாள். அவன் அரசன் ஆகவே முடியாது என அவனுக்கும் தெரியும்
2 குந்தியின் ராஜதந்திரம். அவள் கர்ணன் சாகவும் அர்ஜுனன் ஜெயிக்கவும் வழிதேடித்தான் அங்கே வந்திருக்கிறாள். அதை சாதித்துவிட்டுச் செல்கிறாள். குந்தியின் அந்த ஆசைதான் மகாபாரதத்தின் வேர்
3 சத்ரியர்களுக்கும் நாகர்களுக்குமான போர். அதில் இந்த அத்தியாயத்தில் நாகர்களை ஷத்ரியர்களின் முகமான குந்தி எளிதாகத் தோற்கடித்துவிடுகிறாள். அவளிடமிருந்து கர்ணனைப்பிரித்தவன் நாகனாகிய கார்க்கோடகன். அவர்களின் பழியை சீரமைக்க. அது சாத்தியமாகவே இல்லை கடைசியில் கிருஷணனின் சூழ்ச்சிதான் ஜெயிக்கிறது.
இந்தச் சந்திப்பில் நாகர்களின் தோல்வி உறுதியாகிவிடுகிறது
ராஜ்